ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் -  அரச அச்சக திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்!

ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் -  அரச அச்சக திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்!

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சிடும் செலவு மூன்று மடங்காக அதிகரிக்கக் கூடும் என அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கப்படுவதே இதற்குக் காரணம் என அரசாங்கத்தின் அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில், வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கான ஏனைய செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், இம்முறை ஜனாதிபதித் தேர்தலை அச்சிடுவதற்கு 800 மில்லியன் ரூபா செலவிடப்படும் என எதிர்ப்பார்ப்பதாகவும் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டின் நீளம் 27 அங்குலமாக இருந்த நிலையில், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாக்குச் சீட்டின் நீளம் அதிகரித்தால் அச்சடிக்கும் செலவு மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது